இந்த இணையத்தில் இருந்து காணொளிகள் ,படங்கள்,ஆக்கங்கள் ,கட்டுரைககளை பிரதி பண்ணுதல் தடை செய்யப்படுள்ளது. எமது அனுமதியின்றி பிரதி பண்ணியபின் எமது இணையத்துக்கு நன்றி என போடுதலும் கூடாது .தயவு செய்து இந்த விதி முறையை மீறி சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.நன்றி.
காளிகா பரமேஸ்வரி
புதன், 7 மே, 2014
வெள்ளி, 7 மார்ச், 2014
வியாழன், 11 ஜூலை, 2013
செவ்வாய், 12 ஜூலை, 2011
சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு
Posted by காளிகா அம்பாள் கோவில் நிர்வாகம் on 07:13
அம்பாளுக்கான புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு தொடர்பான அறிவித்தல்
அம்பிகை மெய் அடியார்களே ஆலய உயர் பெருந்திருவிழா 2011 - 06 - 28 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 8ம் நாள் திருவிழா அன்று ( 05-07-2011 செவ்வாய்கிழமை) காலை 10 - 11.57 வரையுள்ள சுப நேரத்தில் அம்பாளின் புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற அம்பாளின் திருவருள் கைகூடி உள்ளது என்பதை அம்பிகையின் அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி
அம்பாள் ஆலய பரிபாலன சபை
புங்குடுதீவு-4
அம்பிகை மெய் அடியார்களே ஆலய உயர் பெருந்திருவிழா 2011 - 06 - 28 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 8ம் நாள் திருவிழா அன்று ( 05-07-2011 செவ்வாய்கிழமை) காலை 10 - 11.57 வரையுள்ள சுப நேரத்தில் அம்பாளின் புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற அம்பாளின் திருவருள் கைகூடி உள்ளது என்பதை அம்பிகையின் அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி
அம்பாள் ஆலய பரிபாலன சபை
புங்குடுதீவு-4
மகோற்சவ விஞ்ஞாபனம் - 2011
Posted by காளிகா அம்பாள் கோவில் நிர்வாகம் on 02:14
புங்குடுதீவு மேற்கு 4ம் வட்டாரம், பிட்டியம்பதி
காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்
கர வருச மகோற்சவ விஞ்ஞாபனம் - 2011
திருச்சிற்றம்பலம்
தனம் தரும் கல்விதருமொருநாளும் தளர்வறியா
மனந்தருந் தெய்வ வடிவுந்தரு நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரு நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாளபிராமி கடைக் கண்களே.
திருச்சிற்றம்பலம்
அம்பிகை அடியார்களே !
அகிலாண்டகோடி நாயகியாக விளங்கும் காளிகா பரமேஸ்வரி அம்பாளாகிய பிட்டியம்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி அடியார்களுக்கு வேண்டிய வரங்களை அருளும் காளிகா பரமேஸ்வரி அம்பாளுக்கு நிகழும் மங்கலகரமான கரவருடம் ஆனித் திங்கள் 13ம் நாள் (28.06.2011) செவ்வாய்க்கிழமை துவாதசித் திதியும், சித்தாமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை, மாலை விழாக்கள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளதால் அத்தருணம் அடியார்கள் வருகை தந்து அம்பாளைத் தரிசித்து இஸ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கிரியாகால நிகழ்வுகள்
ஆனிமாதம் 21ம் நாள் 06.07.2011 புதன்கிழமை : பகல் இரதோற்சவ திருவிழா
ஆனிமாதம் 22ம் நாள் 07.07.2011 வியாழன் : பகல் தீர்த்தத் திருவிழா, இரவு கொடியிறக்கம்
சண்டேஸ்வரி ஆச்சாரிய உற்சவம்
ஆனிமாதம் 23ம் நாள் 08.07.2011 வெள்ளி : பிராயச்சித்த அபிசேகம், மாலை வைரவர் மடை
கும்ப பூசை : 9.00 மணிக்கு
கொடித்தம்ப பூசை: 10.30மணிக்கு
வசந்த மண்டபப்பூசை: 11.00மணிக்கு
மாலைப் பூசை : 5.30 மணிக்கு
கொடித்தம்ப பூசை : 6.00 மணிக்கு
கூட்டுப்பிரார்த்தனை : 6.30 மணிக்கு
மங்கள வாத்தியம் : 7.00 மணிக்கு
வசந்த மண்டபப்பூசை : 7.30 மணிக்கு
மங்கள வாத்தியம்
ஆனி மாதம் 12ம் நாள் 27.06.2011 திங்கட்கிழமை : மாலை அனுக்சை,கிராமசாந்தி,வாஸ்துசாந்தி
ஆனி மாதம் 13ம் நாள் 28.06.2011 செவ்வாய் : பகல் 12.00 மணிக்கு துவாஜாரோகணம்
மாலை யாகாரம்பம் (கொடியேற்றம்)
ஆனி மாதம் 17ம் நாள் 02.07.2011 சனிக்கிழமை : பக்த முக்தி பாவனோற்சவம்
ஆனி மாதம் 20ம் நாள் 05.07.2011 செவ்வாய் : மாலை வேட்டைத்திருவிழா
காலை 10.32 - 11.57 வரையான சுபநேரத்தில் புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு
ஆனிமாதம் 21ம் நாள் 06.07.2011 புதன்கிழமை : பகல் இரதோற்சவ திருவிழா
ஆனிமாதம் 22ம் நாள் 07.07.2011 வியாழன் : பகல் தீர்த்தத் திருவிழா, இரவு கொடியிறக்கம்
சண்டேஸ்வரி ஆச்சாரிய உற்சவம்
ஆனிமாதம் 23ம் நாள் 08.07.2011 வெள்ளி : பிராயச்சித்த அபிசேகம், மாலை வைரவர் மடை
விழாக்கால நேரம்
காலைப் பூசை : 8.30 மணிக்குகும்ப பூசை : 9.00 மணிக்கு
கொடித்தம்ப பூசை: 10.30மணிக்கு
வசந்த மண்டபப்பூசை: 11.00மணிக்கு
மாலைப் பூசை : 5.30 மணிக்கு
கொடித்தம்ப பூசை : 6.00 மணிக்கு
கூட்டுப்பிரார்த்தனை : 6.30 மணிக்கு
மங்கள வாத்தியம் : 7.00 மணிக்கு
வசந்த மண்டபப்பூசை : 7.30 மணிக்கு
ஆலயக் குரு. மகோற்சவக் குரு. சிவசிறீ நா. அருணோதயக் குருக்கள் சிவசிறீ ம. பிரபாகரக் குருக்கள்
மங்கள வாத்தியம்
பிரசாந்குழுவினர்
(கோண்டாவில்)
மாலை அலங்காரம்
இ.பரமேஸ்வரன்
(பண்டத்தரிப்பு)
ஒலி ஒளி அமைப்பு
அம்பாள் தேவஸ்தானம்
விழா உபயகாரர்களும்,
இவ் விழாக்களில் அடியார்கள் வந்து தரிசிப்பதோடு, தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், பூக்கள் முதலியன தந்துதவி அம்பிகையின் அருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மகோற்சவ காலங்களில் சிவலபிட்டி சனசமூக நிலையத்தினரால் அன்னதானம் வழங்கப்படும்.
தொ.இல : 021 320 5578
விழா உபயகாரர்களும்,
தேவஸ்தான பரிபாலன சபையினரும்
சுபம்
வரலாறு
புங்குடுதீவு-4 பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு ஒரு கண்ணோட்டம்
இலங்கையின் வடபுலத்தே அமைந்துள்ள யாழ்குடா நாட்டின் ஊசி முனைகளாக விளங்கும் ஏழு தீவுகளிலும் நடுவனாக விளங்குவது புங்குடுதீவு ஆகும். இவ் அழகிய ஊரிலே 19ம்நூற்றாண்டின் முற்பகுதியிலே இக் கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இக் காலப்பகுதியில் இங்கு கம்மாலை (இரும்பு வேலை) வைத்திருந்த சின்னப்பழனி,பெரியபழனி சகோதரர்கள் அங்கு நின்ற மாவிலங்கை மரத்தடியில் தங்களின் குலதெய்வமாகிய காளியின் வழிபாட்டுக்காக இரும்பாலான சூலத்தை வைத்து வழிபட்டுள்ளனர் என்று இவ்விடத்தைச் சேர்ந்தவரும் சமய ஆர்வலருமான சண்முகம் அவர்களின் கூற்றுப்படி அறிய முடிகின்றது. மேற்கூறப்பட்டுள்ள மாவிலங்கை மரமானது தற்பொழுதும் கோவிலின் உள் வீதியிலே தெற்கு புற வாசலில் நிற்பதை காணமுடிகின்றது.
வயதான பெரியவர்களிடம் இம் மரத்தின் வயது என்னவென்று கேட்டால் தாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்திலிருந்தே இம் மரம் இப்படியேதான் இருந்தது என்பார்கள். அப்படி ஓர் சிறப்புடன் கூடிய இம் மரத்தின் விசேட அம்சம் என்னவென்றால் இது பருப்பதுவுமில்லை, கிளைகள் படுவதுமில்லை. தொடக்கத்திலே மரத்தின் கீழே இரும்புச்சூலம், சங்கு, சேமக்கலத்துடன் இக் கோவில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பின்னர் 1939, 1940ம் ஆண்டு காலப்பகுதியிலே மூலஸ்தானமும், ஏனைய மண்டபங்களும் கட்டப்பட்டு இரும்பாலான சூலம் செப்புச்சூலமாக செய்யப்பட்டு மகாகும்பாபிசேகம் செய்யப்பட்டது.
எனினும் 1964ம் ஆண்டளவில் பாலஸ்தாபனம் நடைபெற்று திரு. நாகலிங்கம் எனும் பிரபல ஆச்சாரியாரால் கோவிலின் அளவுகள் அளக்கப்பட்டு மூலஸ்தான பண்டிகையும், மண்டபங்களும் சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டு மூலவிக்கிரகம் கருங்கல்லினால் அமைத்து 1967ம் ஆண்டு மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. அத்தோடு கைலாசநாதக்குருக்களினால் அதுவரை காலமும் காளிதேவி என அழைக்கப்பட்டு வந்த அம்பாளுக்கு காளிகாபரமேஸ்வரி எனும் நாமம் விசேட சுலோகத்திலே சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
1968ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் வரும் ஆனிமாத உத்தரநட்சத்திரத்தினைத் தீர்த்த திருவிழாவாக கொண்டு மகோற்சவம் நடைபெற்று வந்துள்ளது. 1979ம் ஆண்டு புனராவர்த்தன மகாகும்பபிசேகம் நாகேந்திரக் குருக்கள் தலைமையிலே மிக சிறப்பாக நடைபெற்றது.
1968ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் வரும் ஆனிமாத உத்தரநட்சத்திரத்தினைத் தீர்த்த திருவிழாவாக கொண்டு மகோற்சவம் நடைபெற்று வந்துள்ளது. 1979ம் ஆண்டு புனராவர்த்தன மகாகும்பபிசேகம் நாகேந்திரக் குருக்கள் தலைமையிலே மிக சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின் பல விதங்களிலும் இக் கோவில் சிறப்பு பெற்றது.இவ் ஆலயத்தின் முன்புறம் தீர்த்தக்குளம் உள்ளது.குளத்திற்கு தெற்கிலும் கிழக்கிலும் ஆலமரம், அரசமரம் என்பன காணப்படுகின்றன. 1991ம் ஆண்டு நாட்டு நெருக்கடி சூழ்நிலையால் பெரும்பாலானோர் ஊரைவிட்டு வெளியேற நேரிட்டது. இதனால் ஒழுங்காக பூசைகள் நடைபெறவில்லை. பின்னர் 1996ம் ஆண்டு நடுப்பகுதியில் சிலர் மீண்டும் ஊருக்கு திரும்பியதால் பூசைகள் வழமை போல் நடைபெறத்தொடங்கின. ஆலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ளூரிலும், வெளியூரிலும் உள்ள அடியார்களின் நிதியுதவியுடன் பழைய வசந்தமண்டபம் இருந்த இடத்தில் புதிய வசந்தமண்டபம் அமைக்கப்பட்டதுடன் ஐந்து தளங்களை கொண்டதாக கட்டி முடிக்கப்பட்ட இராஜகோபுர கும்பபிசேகம் 2005ம் ஆண்டு நிறைவுபெற்றது.
திங்கள், 4 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)