ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியிலிருந்தும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிருந்தும் திரு. சிவஞானம் சிறீதரன் விலகவேண்டும் -குணாளன்

குணாளன்

-----------------------------------------------------
தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காது உடனடியாக தமிழ்த்தேசிய விரோத கும்பல் ஆக்கிரமித்து வைத்துள்ள சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியிலிருந்தும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிருந்தும் திரு. சிவஞானம் சிறீதரன் விலகவேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளரும் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான கருணாகரன் குணாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரு சி. சிறீதரன் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்றாலும் அவரால் பாராளுமன்றம் செல்லமுடியாது. சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு அமைய சிறீதரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார். தேர்தலில் அவரின் இடத்திற்கு அடுத்த நிலையில் வரக்கூடிய தமிழ்த்தேசிய விரோதியான சுமந்திரன் அணியில் ஒருவர் பாராளுமன்றம் செல்வார். இது வாக்காளர்களுக்கு சிறீதரன் தெரிந்துகொண்டும் இழைக்கின்ற பச்சைத் துரோகம் ஆகும்.
மேலும் சிறீதரன் பெற்றுக்கொடுக்கும் வாக்குகளினாலேயே ஆப்ரஹாம் சுமந்திரன் அணி ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தையும் கைப்பற்றப்போகின்றது என்பதனையும் தமிழ்த்தேசிய பற்றாளர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்
Gefällt mir
Kommentieren
Senden
Teilen